News Just In

4/21/2020 12:15:00 PM

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பு மருந்து முதல் கட்ட சோதனையில் வெற்றி!

தடுப்பு மருந்தினால் மட்டுமே கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியுமென கருத்து வெளியிடப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடுகளும் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தொடர்பாக சோதனை மேற்கொண்டு வருகின்றன.

உலக நாடுகள் முழுவது பரவிவரும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து சோதனையில் முதல்கட்ட சோதனையில் இங்கிலாந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் முதல்கட்டமாக தடுப்பு மருந்தொன்றை தயாரித்துள்ளனர்.

குறித்த தடுப்பு மருந்தை விலங்குகளுக்கு செலுத்தி இங்கிலாந்து மருத்துவர்கள் முதல் கட்ட சோதனையில் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து, இந்த தடுப்பு மருந்தினை நோய் பாதித்த மனிதர்களிடம் அல்லது தன்னார்வலர்களிடம் இதை செலுத்தி சோதனை செய்ய இங்கிலாந்து முடிவு செய்துள்ளது.

சிறிது நாட்களில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த சோதனை வெற்றி பெற்றதும் உடனடியாக குறித்த மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: