News Just In

4/15/2020 09:55:00 AM

இலங்கையில் கொரோனா தொற்று அபாயம் அதிகரிப்பு! பொறுப்புடன் செயற்படாவிட்டால் நிலைமை மோசமாகலாம்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயமானது உச்சக்கட்டத்தில் உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இன்று (15) தனியார் தொலைக்காட்சி அலைவரிசையின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிபுணர்களின் கருத்துக்களின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாதுவி்ட்டால் நிலைமை மேலும் பாரதூரமாக மாறக்கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: