பேருவளையிலுள்ள பன்வில மற்றும் சீனன்கோட்டை ஆகிய இரண்டு கிராமங்களும் கொவிட்-19 அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஷவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, புனாணை தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட அனைவரும் களுத்துறை மாவட்டம் பேருவளை பகுதியில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக 219 பேர் அழைத்து செல்லப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா வைரஸ் தொடர்பில் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறித்த பரிசோதனைகளின் முடிவுகளின்படி அங்கு கொரோனா தொற்றாளர்கள் பலர் அடையாளம் காணப்பட்டதனையடுத்து பன்வில மற்றும் சீனன்கோட்டை ஆகிய இரண்டு கிராமங்களும் முற்றாக முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4/14/2020 09:35:00 AM
பேருவளையில் இரு கிராமங்கள் கொரோனா அபாய வலயங்களாக பிரகடனம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: