News Just In

4/23/2020 12:41:00 PM

கொரோனா பரவல் அபாய பகுதியில் இருந்து தப்பி யாழ்ப்பாணத்துக்கு வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்


கொழும்பில் கொரோனா வைரஸ் பரவல் அபாய பகுதியில்
தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரும் சாரதியும் நேற்று இரவு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குருநகர், பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர்,
யாழ்ப்பாணம் ஐந்துசந்தி- ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை- ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் – தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர்
தெல்லிப்பழை (சந்திக்கு அருகில்) ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும்
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

சாரதி யாழ்ப்பாணத்தில் இருந்து அத்தியாவசி சேவைக்கான அனுமதிப்பத்திரத்துடன் சென்றுள்ளார். ஏனையவர்கள் தொழில்நிமித்தம் கொழும்பில் தங்கியிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ளனர்.

No comments: