News Just In

4/29/2020 12:16:00 PM

ஊரடங்குச் சட்டத்தை தளர்த்துவது தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்!?


இலங்கையில் ஊரடங்குச் சட்டத்தை விரைவில் தளர்த்த முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மதத்தலைவர்கள் சிலருடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நோய்த் தொற்று பரவுகையை விரைவில் கட்டுப்பாட்டுக் கொண்டு வர முடியும் எனவும், பின்னர் ஊரடங்குச் சட்டத்தை விரைவில் தளர்த்தலாம் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மனித படுகொலைகளை மட்டும் நோக்கமாக கொண்டது அல்லது எனவும் அதனை விடவும் வேறும் நோக்கங்களைக் கொண்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிக செலவுடைய தேர்தல் பிரச்சாரங்களை வரையறுத்து புதிய தேர்தல் கலாச்சாரத்தை உருவாக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

No comments: