News Just In

4/25/2020 04:52:00 PM

தேசிய மோட்டார் வாகன திணைக்களத்தின் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்க தீர்மானம்


தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள மோட்டார் திணைக்களத்தின் செயற்பாடுகளை கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில்  மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக முடங்கிக்கிடந்த தேசிய மோட்டார் வாகன திணைக்களத்தின் செயற்பாடுகள் மீண்டும் அடுத்த வாரம் முதல் வழமைக்கு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: