News Just In

4/02/2020 10:38:00 PM

வெளிமாவட்டத்திற்கு கொண்டு செல்லும் மீன்கள் பரிசோதனை! செல்பவர்களுக்கும் சுய தனிமைப்படுத்தல்!!

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் மீன்களின் தரத்தினை உறுதி செய்யும் நடவடிக்கையினை கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்டனர்.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் உள்ள வெளிமாவட்டங்களுக்கு மீன்கள் ஏற்றுமதி செய்யும் விற்பனை நிலையங்களில் மீன்களின் தரத்தினை உறுதி செய்யும் வகையில் பரிசோதனைகள் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ரி.எம்.நஜீப்கானின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார மேற்பார்வை பரிசோதர் இ.இன்பராஜ் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்களினால் இப்பரிசோதனைகள் நடைபெற்றது.

அத்தோடு மீன்களை வியாபாரத்திற்கு வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் நபர்கள் மீண்டும் பிரதேசத்திற்கு வருகை தந்த பின்னர் பதினான்கு நாட்கள் சுய தனிமைப்படுத்தில் இருந்து கொள்ளுமாறு மீனவர்களுக்கு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினரால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

No comments: