(வவுணதீவு எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை , நெடுஞ்சேனைபகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் வவுணதீவு பொலிசாரால் நேற்று அதிகாலை மேற்கொணட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த 15 பரல்கள் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
வவுணதீவு பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைந்த இரகசிய தகவலுக்கமைவாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி, உதவி பொலிஸ் பரிசோதகர் சஜித் ஆகியோரின் தலைமையில் மேற்படி சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் காட்டுக்குள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி தெரிவித்தார்.
ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இவ்வாறான சட்டவிேராத நடவடிக்ைககள் காட்டுப்பகுதியில் அதிகரித்துள்ள நிலையில் இந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் கைப்பட்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட கசிப்பு, கோடா, பரல்களை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி நேரில் சென்று பார்வையிட்டதுடன் இந்த நடவடிக்கையினை மேற்கொண்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலீஸாருக்கு பாராட்டினையும் தெரிவித்தார்.
4/12/2020 08:35:00 AM
Home
/
உள்ளூர்
/
பொலிஸ்
/
மட்டக்களப்பு
/
வவுணதீவு
/
வவுணதீவு பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை-இருவர் தப்பியோட்டம்
வவுணதீவு பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை-இருவர் தப்பியோட்டம்
Subscribe to:
Post Comments (Atom)





No comments: