
மட்டக்களப்பு- ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாதுறை பிரதான வீதியில் இன்று காலை பிக்கப் ரக வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
பிரதான வீதியில் பிக்கப் ரக வாகனம் பயணித்து கொண்டிருந்த வேளை கொம்மாதுறை பிரதான வீதியினை மோட்டார் சைக்கிளில் கடக்க ஒருவர் முற்பட்டுள்ளார்,
எதிர் பாராத விதமாக வந்த மோட்டார் சைக்கிளில் பிக்கப் ரக வாகன சாரதி மோதிவிடும் என்று வாகனத்தை திருப்பியதால் வாகனம் மோட்டார் சைக்கிளில் உராசி வீதியின் அருகில் இருந்த ரெலிகொம் கம்மத்துடன் மோதி நின்றது என விபத்தினை கண்டவர்கள் தெரிவித்தனர்.
எவருக்கும் பெரும் பாதிப்பு ஏதும் இல்லாத நிலையில் குறித்த பிக்கப் ரக வாகனம் சேதமடைந்துள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மயிர் இழையில் உயிர் தப்பினார் என விபத்தை அவதானித்தவர்கள் தெரிவித்ததுடன், பிக்கப் வாகன சாரதியின் செயலால் உயிரிழப்பு தடுக்கப்பட்டதாக கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.




No comments: