News Just In

4/13/2020 07:46:00 PM

இராமகிருஷ்ண மிஷனால் மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பிற்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து பலரும் தமது இடங்களில் முடங்கியுள்ளனர்.

இவ்வாறு அசாதாரண சூழ்நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உள்ள இடங்களுக்கு மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் நேரடியாக சென்று உலருணவு பொதிகளை கையளித்து வருகின்றனர்.

அந்தவகையில், இன்று (13) கனடா இராமகிருஷ்ண சேவாஷ்ரமம் அனுசரணையில் 72 உலர் உணவுப் பொதிகளை  மட்டக்களப்பு உதயம் விழிப்புலனற்றோர் அமைப்பிற்கு நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.

No comments: