பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே மார்ச் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. சீனாவின் வுஹான் நகரத்தில் கடந்த நவம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி விரிவடைந்து வருகிறது.
மார்ச் 2 ஆம் திகதி, சீனப் பெண் ஒருவர் இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருதமை உறுதி செய்யப்பட்டது. இலங்கையிலும் வைரஸ் அச்சுறுத்தலைப் புரிந்து கொள்வதற்கு ஆட்சியாளர்களுக்கு ஏராளமான காரணங்கள் இருந்தன.
இருப்பினும், கொரோனாவை ஒழிப்பதை விட, அவர்களின் அதிகாரத்தை பலப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையகக் கொண்டு மார்ச் 11 அன்று, இலங்கையில் ஒரு கொரோனா நோயாளி இருப்பது கண்டறியப்பட்டது.
பின்னர் மற்றொரு குழுவும் கண்டறியப்பட்டது. இந்த தொற்று நோய் நம் நாட்டில் பரவுகிறது என்பது நன்கு நிரூபணமாகியது. நாட்டிற்கும் மக்களுக்கும் பொறுப்பு கூறும் பொறுப்பு வாய்ந்த அரசியல் இயக்கம் என்ற வகையில், கொரோனாவை தடுத்து நிறுத்துவதே நமது முதன்மை பொறுப்பாகும்.
இருப்பினும், அரசாங்கம் அவர்களின் தேர்தல் வரைபடத்தை விரிப்பதற்கே முன்னுரிமையளித்து வந்தது. அரசாங்கத்தால் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதன் விளைவாக, மார்ச் 19 வரை கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதனையே அவர்களின் முக்கிய அக்கறையாக கொண்டிருந்தனர். பாராளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பை மீள பெற்று மக்கள் ஆணையின்படி பல மாதங்களுக்கு நாடாளுமன்றத்தை கொண்டு செல்ல முடியுமாயிருந்தது. இருப்பினும், பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடைபெறும் என்றும் ஜனாதிபதி சார்க் தலைவர்களிடம் தெரிவித்தார்.
இந்தத் தேர்தலில் அரசாங்கம் மகத்தான வெற்றியைப் பெற முடியும் என்பதால் தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கூறினார். ஐ.தே.க. துண்டு துண்டாக சிதைந்து இருப்பதால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வெற்றியை எளிதாக பெறுவதற்காக தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சர் லக்ஸ்மன் யாபா கூறினார்.
கொரோனா தொற்று பரவாதபடி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கொண்டுச் செல்ல முடியுமென அமைச்சர் டலாஸ் அலகபெருமா தெரிவித்தார்.இருப்பினும், மார்ச் 19 ஆம் திகதி வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர், தேர்தலை ஆணையத்திற்கு கிடைத்த அதிகாரத்தின்படி ஏப்ரல் 25 நடத்தவிருந்த தேர்தலை காலவரையின்றி பிற்போட்டது.
நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு நன்றியை தெரிவிக்கின்றோம். தேர்தல் ஆணையகம் மக்கள் சார்பாக நின்று தைரியமான முடிவை எடுத்தனர். அம் முடிவு எடுக்கப்பட்டிருக்காவிட்டால் நம் நாட்டு மக்கள் என்னவிதமான சோகத்தை அனுபவித்திருப்பார்கள் என்ற கடுமையான கேள்வி எழுகிறது.
அரசாங்கத்தின் காவாலித்தனமான நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக தேர்தல் ஆணையம் தைரியமான முடிவை எடுத்ததால் மக்கள் இன்று வீட்டினுள் முடக்கப்பட்டு வெற்றிகரமாக கொரோனாவுக்கு எதிராக முகம் கொடுப்பதற்கு முடியுமாயிருக்கிறது. தேர்தலை ஒத்திவைத்ததன் காரணமாகவே அரசாங்கத்திற்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையே இன்றைய முறுகல் நிலை உருவாகியுள்ளது என்றே நாங்கள் நம்புகிறோம்.
கொரோனா விரிவடையும் நிலைமையை அடுத்து அரசியலமைப்பில் எழக்கூடிய பல பிரச்சினைகள் குறித்து தேர்தல் ஆணையம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்தது. நம் நாட்டின் அரசியலமைப்பின் படி 3 மாதங்களுக்கு மேலாக எந்தவொரு விஷயத்திற்கும் பாராளுமன்றத்தை கூட்டாமல் இருக்க முடியாது.
சட்டவாக்கம், நிதி அதிகாரம், ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்வதால் பாராளுமன்றத்திற்கு இவ்வாறான நிலையை அரசியலமைப்பு வழங்கியுள்ளது. மார்ச் 02ஆம் திகதி பாராளுமன்றத்தை கலைக்கப்பட்ட நாள் முதல் ஜுன் 02ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடாத்தி புதிய பாராளுமன்றம் கூட வேண்டும்.
ஆனால் தொற்று பரவுவதன் காரணமாக ஜுன் 02ஆம் திகதிக்கு முன்னர் தேர்தலை நடத்துவதென்பது பாரிய சிக்கலைத் தோற்றுவிக்கும் என்பதை தேர்தல் ஆணையகம் கணிப்பிடுகிறது. ஆணையகத்தால் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பி ஜுன் மாதம் 02ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தை கூட்டாததால் ஏற்படப்போகும் அரசியலமைப்பு நெருக்கடித் தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்தது.
இதுபோன்ற சூழ்நிலையை கையாள வேண்டிய விதம் குறித்து ஜனாதிபதி உச்சநீதிமன்றத்தின் விளக்கத்தை கோர வேண்டுமென தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நம் நாட்டின் அரசியலமைப்பை விளக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்திற்கே உண்டு. அரசியலமைப்பில் எந்தவொரு பிரிவிற்கும் தெளிவற்றத் தன்மைக்கும் விளக்கம் கோருவதற்கு ஜனாதிபதிக்கு உரிமை உண்டு.
இந்த அரசியலமைப்பு நெருக்கடியை உச்சநீதிமன்றம் மூலம் விளக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என்று தேர்தல் ஆணையம் ஜனாதிபதிக்கு அறிவித்தது. அதற்கு பதிலளிக்கும் முகமாக ஜனாதிபதி செயலாளர் மூலம் தேர்தல் ஆணையத்திற்கு ஜனாதிபதி கடிதம் அனுப்பியிருந்தார்.
அந்த கடிதத்தில் இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிடப்படுகிறது. மே 28 வரை தேர்தலை நடத்த முடியாது என்று ஜனாதிபதிக்கு உணருகின்றமையாகும். அதனால் தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில், மே 28 க்கு முன்னர் தேர்தலை நடத்த முடியாது என்று நினைக்கவில்லை என்று கூறுகிறது.
தேர்தல் என்பது தேர்தல் நடைபெறும் தினத்திற்கு மட்டுமான செயல்முறை மட்டுமல்ல. ஜனநாயக தேர்தல்கள் என்பது தேர்தல்களுக்கு அதிகாரிகளை தயார்படுத்துதல், பயிற்சி அளித்தல் மற்றும் இந்த நிறுவனங்களை முறையாக செயல்படுத்துவது பற்றியது.
அரசியல் இயக்கங்களுக்கு தமது கொள்கை நிலைப்பாட்டை மக்களிடையே கொண்டு செல்லும் உரிமை மற்றும் மக்களுக்கு அந்தந்த அரசியல் இயக்கங்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு செயற்படுவதே ஒட்டுமொத்த ஜனநாயக தேர்தலாகும். தேர்தல்களை நடத்துவது ஒரு ஜனநாயகம் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.
இது மக்கள் தங்கள் சொந்த அரசியல் பிரச்சாரங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான உரிமையையும், அவர்களின் கொள்கைகளை மக்களுக்கு விளக்கும் உரிமையையும் கட்டுப்படுத்துகிறது.
நேற்றும் இன்றும் 8 நோயாளிகள் பதிவாகியுள்ளது. இதேபோல், கம்பாஹா மாவட்டம் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20 ஆம் திகதி தொடங்கவிருந்த பாடசாலை காலம் மே 11 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இத்தகைய சூழ்நிலையை எதிர்கொண்டு குறுகிய நோக்கத்திற்காக தமது அதிகாரப் பேராசைக்காக தேர்தல்களை நடத்தும் ஈனத்தனமான போக்கை பொது மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.
மக்கள் தலையீடு அல்லது மீட்புக்கு உட்படுத்தப்படுகிறார்களா என்பதை தீர்மானிப்பதே நம் அனைவரின் முக்கிய பணியாகும். ஜூன் 02 க்கு முன் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு முடியாது போனால் அரசியலமைப்பு நெருக்கடியை எவ்வாறு தீர்ப்பது? இந்த நாடாளுமன்றத்தை மீள கூட்டுவதற்கான திறன் ஜனாதிபதிக்கு உண்டு.
இத்தகைய பேரழிவுகளை எதிர்கொண்டு மக்கள் மற்றும் நாட்டின் சார்பாக செயல்பட அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. அரசியலமைப்பு நெருக்கடியைத் தடுக்க பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி பயன்படுத்த வேண்டும்.

No comments: