சடலங்களை இடும் பைகளை வழங்குமாறு செஞ்சிலுவை சங்கத்துக்கு சுகாதார அமைச்சு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகளுக்கான மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸினால் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தடயவியல் ஒருங்கிணைப்பாளருக்கு இந்த கடிதம் கடந்த 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்று தீவிரமடையாவிட்டாலும் சடலங்களை இடும் பாதுகாப்பு பைகள் இல்லையென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்திருந்த நிலையில், குறித்த பைகள் தேவையெனில் தமக்கு எழுத்து மூலம் கோரிக்கை வழங்குமாறு செஞ்சிலுவை சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய குறித்த கடிதத்தை அனுப்பியதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலர் (சுகாதார சேவைகள்) சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், கொரோனா தொற்று காரணமாக இறப்போரின் சடலங்கள் மட்டுமன்றி, சந்தேகத்துக்கிடமான மரணங்கள், மீள தோண்டி எடுக்க வேண்டிய நிலைமை வரலாம் என நம்பப்படும் சடலங்களும் இது போன்ற பாதுகாப்பு பைகளில் இடப்பட்டே இறுதிக் கிரியைகளுக்காக கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
4/26/2020 09:45:00 PM
சடலங்களை இடும் 1000 பாதுகாப்பு பைகளை வழங்குமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: