News Just In

4/26/2020 08:59:00 PM

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று முன்னர் மேலும் அதிகரிப்பு!!


இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. சற்றுமுன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் எட்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 485ஆக உயர்ந்துள்ளது.

இந்தநிலையில், இதுவரை 120 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதோடு 358பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: