News Just In

4/30/2020 02:22:00 PM

248 கடற்படையினருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது!!


நாட்டில் நேற்று புதன்கிழமை வரை 248 கடற்படைச் சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றுபவர்கள்.

வெலிசறை கடற்படை முகாமில் கடமையின் போது 167 கட்ற்படையினருக்கும் விடுப்பில் உள்ள 81 கடற்படையினரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்ட 30 பேரில் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 22 சிப்பாய்கள் அடங்குகின்றனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

No comments: