கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நாட்டில் ஊரடங்குச் சட்டம் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில், குறித்த ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் பலரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டுவருகின்றனர்.
இதன்படி நேற்று (01) காலை 6.00 மணி முதல் இன்று (02) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் 1015 பேர் கைது செய்யப்பட்டு, 254 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட தினமான மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று காலை வரை 9466 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 2332 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

No comments: