
மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலையின் 2020 ஆம் ஆண்டுக்கான மாணவ தலைவிகளுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி தவத்திருமகள் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியராக கடமையாற்றும் திருமதி தர்மினி ராகுலன் அவர்களும் சிறப்பு அதிதியாக பாடசாலையின் முன்னாள் அதிபர் திருமதி ஹரணியா சுபாகரன் அவர்களும் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது 56 சிரேஷ்ட மாணவிகளுக்கும், 15 கனிஷ்ட மாணவிகளுக்கும் சின்னம் சூட்டப்பட்டு அடையாள அட்டைகளும் அணிவிக்கப்பட்டன.
சின்னம் சூட்டப்பட்டு மாணவ தலைவிகளாக பொறுப்பேற்ற மாணவிகளை படங்களில் காணலாம்.














No comments: