நாடாளுமன்றத்தின் உத்தியோகப்பூர்வ காலத்தை நிறைவு செய்யாதவர்களுக்கே ஒய்வூதியம் கிடைக்கப்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் நான்கரை வருடங்களை கடந்துள்ளமையினால் அரசியல் அமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவருக்கு நாடாளுமன்றை கலைப்பதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.
இதற்கமைய இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி 8 ஆவது நாடாளுமன்றம் கூடியமை குறிப்பிடத்தக்கது.
8 ஆவது நாடாளுமன்றில் ஏற்கனவே நாடாளுமன்ற உறுப்பினர்களாக இல்லாது புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்புரிமையை இராஜினாமா செய்ததன் பின்னர் அந்த வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் ஓய்வூதியம் இல்லாமல் போகும் என்பதோடு மரணித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும் ஓய்வூதியம் கிடைக்கப்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: