News Just In

3/02/2020 07:42:00 PM

மண்முனை தென் எருவில் பிரதேச மரநடுகை நிகழ்வு


மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி திணைக்கள அதிகாரிகளால் சமுர்த்தி வங்கிகளின் ஏற்பாட்டில் தேசிய ரீதியிலான நாட்டைக் கட்டி எழுப்பும் சுபீட்சமிகு நோக்குக்கு அமைய தூய்மை மற்றும் பசுமை மூலம் செழிப்படைந்த கிராமத்தை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாங்காடு சமுர்த்தி வங்கி கிளை வளாகத்தில 1 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை; இடம்பெற்ற மரநடுகை சமுர்த்தி வங்கி முகாமையாளர் செ.ஆனந்தமோகன் தலைமையில் இடம்பெற்றது. 

மரநடுகை நிகழ்வில் முகாமைத்துவ பணிப்பாளர் உதயகுமார், மாவட்ட தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார் மாவட்ட சமுர்த்தி திணைக்கள கணக்கு நடவடிக்கை பொறுப்பாளர் எஸ்.ஜெயராஜ், பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் தெ.உதயசுதன் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சமுர்த்தி சங்க அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி திணைக்கள பிரதான நிகழ்வு மாங்காடு சமுர்த்தி வங்கி கிளையில்; நடைபெற்றது அதன் தொடர்ச்சியாக எருவில், மற்றும் கல்லாறு சமுர்த்தி வங்கி கிளைகளில் தேசிய ரீதியிலான நாட்டைக் கட்டி எழுப்பும் சுபீட்சமிகு நோக்குக்கு அமைய தூய்மை மற்றும் பசுமை மூலம் செழிப்படைந்த கிராமத்தை உருவாக்கும் திட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அத்தடன் முற்கூட்டியே சிரமதானங்களம் நடந்த முடிந்துள்ளன.

இத் திட்டத்தின் கீழ் வீட்டுக்கு ஒரு மரக்கன்றையாவது நடுவதற்கான பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகளும் கிராம ரீதியாக ஆங்காங்கே நடைபெற்றன. பிரதான விழிப்புணர்வூட்டல் பொது கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பிரதேசத்தில் பசுமையை ஏற்படுத்த சமுர்த்தி திணைக்கள அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் வெயிலில் வாடி வதங்கியபோதும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததை அவதானிக்க் கூடியதாக இருந்தது.












No comments: