News Just In

3/26/2020 09:32:00 PM

துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பினால் உதவிகள் வழங்கிவைப்பு

துணுக்காய் ஒளிரும் வாழ்வு அமைப்பினால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் நிதி உதவியுடன் பல வறுமைக்குட்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன.

துணுக்காய் பிரதேச அனைத்துக்கிராம அலுவலர் பிரிவுகளிலும் உள்ள ஒரு நேர உணவுக்கே பொருட்களை கடைகளில் கொள்வனவு செய்ய முடியாத பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 பேரை இனங்கண்டு ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போதும் பிரதேச செயலாளர் ,பொலிஸ் ,சுகாதார வைத்தியதிகாரி, பிரதேச சபை பேன்ற பிரிவுகளின் அனுமதியைப் பெற்று அவர்களின் வீடுகளுக்கே சென்று உலருணவு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ்வாறு ஊரடங்கு காலங்களில் துணுக்காய் உட்பட பல பிரதேசங்களில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர், ஒரு வேளை உணவுக்காக கஸ்ரப்படும் இவர்களை போன்றோருக்காக ஒளிரும் வாழ்வு அமைப்புடன் இணைத்து பணி செய்ய விரும்புவர்கள் இணைந்து கொள்ள முடியும்.

























No comments: