News Just In

3/03/2020 11:29:00 AM

'' அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து வேலை செய்யவும் '' -டுவிட்டர் நிறுவனம்


கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக மீள் அறிவித்தல் வரும் வரை டுவிட்டர் நிறுவனம் தனது ஊழியர்களை அலுவலகங்களிலிருந்து விலகி வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

குறித்த அறிவிப்பை டுவிட்டர் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் நேற்று (02) திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

டுவிட்டரின் மனிதவளத் துறையின் தலைவர் ஜெனிபர் கிறிஸ்டி 'கொவிட் -19 என்ற கொரோனா வைரஸ் எங்களுக்கும் - நம்மைச் சுற்றியுள்ள உலகிற்கும் பரவுவதற்கான நிகழ்வைக் குறைப்பதே எங்கள் குறிக்கோள்.' என தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் உள்ள 5,000 ஊழியர்கள் அனைவரையும் வேலைக்கு வரக்கூடாது எனவும் ஊழியர்களை 'வலுவாக ஊக்குவிப்பதாக' அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், கிறிஸ்டி தெரிவித்திருப்பதாவது, 'ஏராளமான எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் எங்கள் டுவிட்டர் பயனர்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான மிகுந்த அர்ப்பணிப்புடனும்' நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

ஹொங்கொங் , ஜப்பான் மற்றும் தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஊழியர்கள் அந்நாட்டுகளில் நடைமுறையிலுள்ள அரசாங்க கட்டுப்பாடுகளின் காரணமாக இப்போது வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டியிருக்கிறது.

தொழிலாளர்களுக்கான அனைத்து அத்தியாவசிய வணிக பயணங்களையும் நிகழ்வுகளையும் இடைநிறுத்துவதாக நிறுவனம் சனிக்கிழமை அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: