News Just In

3/03/2020 12:00:00 PM

யாழில் வெடிமருந்துடன் நால்வர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது


வல்வெட்டித்துறை பகுதியில் வெடிமருந்து 850 கிராம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 4 பேரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து நேற்று இரவு பயங்கரவாத விசாரணை பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது முதல் 24 வயதுடைய இளைஞர்களையே இவ்வாறு கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரையும் யாழ்ப்பாணத்தில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைத்திருப்பதுடன் நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments: