News Just In

3/09/2020 03:25:00 PM

மட்டக்களப்பில் "பன்முகப்பார்வையில் சுவாமி விபுலாநந்தர்" நூல் வெளியீட்டு விழா


"பன்முகப்பார்வையில் சுவாமி விபுலானந்தர்" நூல் வெளியீட்டு விழா நிகழ்வுகள் இன்று (09) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை மண்டபத்தில் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழா சபை தலைவர் க.பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு ஆன்மீக அதிதிகளாக மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிஷன் உதவி பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தாஜீ அவர்களும், அருட்பணி அ.அ.நவரெட்ணம் அடிகளார் அவர்களும் கலந்துகொண்டனர்.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா, சிறப்பு அதிதியாக கிழக்கு பல்கலை கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ஜீ.கென்னடி, கௌரவ அதிதிகளாக பல்துறை கலைஞர் க.பரராஜசிங்கம், கலாபூசணம் ஆ.மு.சி.வேலழகன், ஓய்வுநிலைப் பேராசிரியர் கலாநிதி செ.யோகராசா அவர்களும்

அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் ச.நவநீதன், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஹரிஹரராஜ், ஓய்வு நிலை பேராசிரியர்களான மௌனகுரு மற்றும் செல்வராஜா அவர்களுடன் இலக்கியவாதிகள், கல்வியியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் "பன்முகப்பார்வையில் சுவாமி விபுலாநந்தர்" நூல் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், கௌரவ அதிதிகள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.





































No comments: