News Just In

3/09/2020 04:25:00 PM

சுற்றுலாத்துறை மூலம் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் பெற திட்டம்!!

சுற்றுலாத்துறையில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு ஐந்து வருடகாலத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

இது சம்பந்தமாக அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலை அடுத்து சுற்றுலாத்துறை அழுத்தங்களை எதிர்கொண்டது. இந்த நிலையில் இருந்து சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments: