-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாவது சுயேட்சைக் குழு இன்று (13) நண்பகல் நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்திருப்பதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் கலாமதி பத்மராஜா தெரிவித்தார்.
புதிய காத்தான்குடியைச் சேர்ந்த முகம்மது தம்பி உவைஸ் தலைமையிலான சுயேட்சைக் குழுவே நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. நியமனப் பத்திரங்களை கையேற்கும் இரண்டாவது நாளான இன்று (13) மாவட்ட செயலக வளாகத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
3/13/2020 04:45:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மட்டக்களப்பில் சுயேட்சைக் குழுவொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனப் பத்திரம் தாக்கல்
மட்டக்களப்பில் சுயேட்சைக் குழுவொன்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனப் பத்திரம் தாக்கல்
Subscribe to:
Post Comments (Atom)




No comments: