News Just In

3/02/2020 02:30:00 PM

மட்டக்களப்பு BEYS பாலர் பாடசாலை தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற டெங்கு விழிப்புணர்வு வீதி ஊர்வலம்

BEYS பாலர் பாடசாலையின் 03ஆவது ஆண்டு பாடசாலை தினத்தையொட்டி ஒழுங்கமைக்கப்பட்ட டெங்கு விழிப்புணர்வு வீதி ஊர்வலமானது பாடசாலை நிறுவனர் ரமணி எட்வேட்ஸ் தலைமையில் சனிக்கிழமை (2020/02/29) இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வு ஊர்வலமானது, காலை 08.30 மணிக்கு மட்டக்களப்பு மணிக்கூட்டு கோபுரம் வழியாக நடைபவனியை ஆரம்பித்து 09.30 மணிக்கு மட்டக்களப்பு பொதுச் சந்தையினூடாக சென்று BEYS பாலர் பாடசாலையை சென்றடைந்தது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர், கிராம சேவக உத்தியோகத்தர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், BEYS பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள், நலன் விரும்பிகள், அம்கோர் நிறுவன உத்தியோகத்தர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள் ஆகியவர்கள் இணைந்து கொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்வில் BEYS பாடசாலையால் அனைவருக்கும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

No comments: