News Just In

2/03/2020 09:39:00 AM

காத்தான்குடியில் திருடப்பட்ட தங்க நகைகள் கொழும்பில் மீட்பு!

காத்தான்குடியில் திருடப்பட்ட தங்க நகைகள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பகுதியில் கடந்த மாதம் 04ஆம் திகதி வீடு ஒன்றை உடைத்து 55,000 ரூபா பணம் 23 பவுண் தங்க நகைகள் என்பன திருடப்பட்டிருந்தன. குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக தேடப்பட்டுவந்த சந்தேக நபரை கொழும்பு புறக்கோட்டை பகுதியில் பொலஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், 16 பவுண் தங்க நகைகள், கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தெரிவித்தார்.

திருடப்பட்ட தங்க நகைகளை கொள்வனவு செய்தார் எனக் கூறப்படும் நபர் ஒருவரை வெள்ளவத்தையில் உருக்கப்பட்ட 16 பவுண் தங்கத்துடன் கைது செய்த பொலிசார், குறித்த திருட்டுக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபரை காத்தான்குடியில் வைத்து கைது செய்ததுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றினையும் கைப்பற்றினர்.

No comments: