கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 361ஆக அதிகரித்துள்ளதாகஅந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் 56 பேர் ஞாயிற்றுக்கிழமை (02.02.2020) உயிரிழந்துள்ளனர்
கொரோனா வைரஸ் தொற்றினால் உலகளாவிய ரீதியில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 17,205ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் 2003 ஆம் ஆண்டு 349 பேர் சார்ஸ் வைரஸினால் உயிரிழந்திருந்த நிலையில், குறித்த எண்ணிக்கையை விட கொரோனா வைரஸினால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: