News Just In

2/02/2020 07:08:00 PM

முதலாவது அறபிக் கல்லூரியின் அல்குர்ஆன் மனனப் போட்டி


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூரின் முதலாவது ஹிப்ழ் மதரசாவான குல்லிய்யது தாரில் உலூம் (அறிவு இல்லம்); கலாசாலையின் அல்குர்ஆன் மனனப் போட்டி ஞாயிற்றுக்கிழமை 02.02.2020 கலாசாலை மண்டபத்தில் இடம்பெற்றதாக அதன் செயலாளர்   அஷ‪;ஷெய்க் எம்.எஸ்.எம். ஹாமீம் அஸ்ஹரி தெரிவித்தார்.

இக்கல்லூரியில் மார்க்கக் கல்வியைக் கற்றவர்களும் தற்போது கற்று நிறைவு செய்தவர்களுமாக சுமார் 70 பேர் இப்போட்டியில் கலந்து கொண்டார்கள்.

அல்குர் ஆனை தனது ஏழு வயதில் மனனமிட்ட இலங்கையின் முதலாவது ஹாபிஸான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட்டினால் இக்கலாசாலை 1987 ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது வரை இக்கல்லூரியில் இருந்து மார்க்கக் கல்வி கற்று சுமார் 170 பேர் வெளியேறியிருக்கின்ற நிலையில் சர்வதேச ரீதியான மார்க்கக் கல்வி சார்ந்த போட்டிகளில் 9 பேர் சர்வதேச விருதுகளையும், 48 பேர் தேசிய விருதுகளையும் தக்க வைத்தக் கொண்டுள்ளதோடு சர்வதேச பல்கலைக்கழகங்கள் உட்பட இலங்கையின்  பல்கலைக்கழகங்களிலும் பலர் விரிவுரையாளர்களாக இருப்பதாக கலாசாலையின் அதிபர் மௌலவி யூ.எல்.எம். ஹம்ஸா தெரிவித்தார்.

நிகழ்வில் இக்கல்லூரியில் இருந்து முதலாவது மார்க்கக் கல்வியைக் கற்றுத் தேர்ச்சி பெற்ற மௌலவி உஸனார் றஹீமும் கலந்து கொண்டார்.







No comments: