அம்பாறை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்ட இரண்டு புதிய கட்டிடங்களை அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை (11) பகல் திறந்து வைத்தார்.
புதிதாக கட்டப்பட்ட 49 அறைகள் கொண்ட மாணவர் விடுதி, முழுமையான வசதியுள்ள நிர்வாக கட்டிடம், ICT ஆய்வகம் மற்றும் ஹார்டி மைதானத்தின் வளாகத்தில் தரைவிரிப்பு, காபட் இடப்பட்ட வீதியும் திறக்கப்பட்டது. ரூ. 89.16 மில்லியன் மற்றும் ரூ. 304.79 மில்லியன் செலவில் இக் கட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவி திருமதி சிறியானி விஜேவிக்ரம, அம்பாறை மாவட்ட செயலாளர் டி.எம்.எல். பண்டாரநாயக்க, தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சித் துறை பணிப்பாளர் நாயகம் திருமதி பி.என்.கே. மலலசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சித் துறை பணிப்பாளர் நாயகம் திருமதி பி.என்.கே. மலலசேகர வரவேற்புரையாற்றியதுடன், அமைச்சர் தினேஷ் குணவர்தன, அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவி திருமதி சிறியானி விஜேவிக்ரம, அமைச்சின் செயலாளர் டி.எம்.சரத் அபேகுணவர்த்தன, ஆகியோர் உரையாற்றினர். நன்றி உரையை ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியின் பணிப்பாளர் எஸ். தியாகராஜா நிகழ்த்தினார்.
Subscribe to:
Post Comments (Atom)





















No comments: