News Just In

2/11/2020 10:30:00 PM

மட்டக்களப்பு-தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 05ஆவது ப்ரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி


மட்டக்களப்பு-தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 05ஆவது தாழங்குடா ப்ரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி கடந்த சனி (08.02.2020) மற்றும் ஞாயிறு (09.02.2020) தினங்களில் கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் நடைபெற்றது.

இதன் ஆரம்ப நிகழ்வில் விளையாட்டு உத்தியோகத்தர், மற்றும் தாழங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டு கிரிக்கட் சுற்றுப்போட்டியினை தொடக்கி வைத்தனர்.

கழக உறுப்பினர்கள் Zebra Lions, Eleven Kings, Thalankudah Warriors, Green Knights, Kennedy என ஐந்து அணிகளாக பிரிந்து பலப்பரீட்சை நடத்தியதில், இறுதிப்போட்டியில் Zebra Lions அணியும் Eleven Kings அணியும் மோதிக்கொண்டன.

இறுதியில் இந்த ஆண்டுக்கான தாழங்குடா பிரீமியர் லீக் போட்டியின் வெற்றிக் கிண்ணத்தை Zebra Lions அணி சுவீகரித்துக்கொண்டது.

போட்டிகளின் முடிவில் சிறந்த பந்துவீச்சாளராக ரமேஷ் அவர்களும், அதிகூடிய ஆறு ஓட்டங்களை பெற்றவர் மற்றும் தொடர் ஆட்ட நாயகனாக ஜோ.ஜெகன் அவர்களும், சிறந்த களத்தடுப்பாட்ட வீரராக ப.மதிமேகன் அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக பூ.முகுந்தன் அவர்களும், சிறந்த ஆட்ட நாயகனாக ஜோ.ஜெகதீஸ் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

தாழங்குடா ப்ரீமியர் லீக் கிரிக்கட் சுற்றுப்போட்டி இறுதி நிகழ்வின் விசேட அம்சமாக ஸீப்ரா விளையாட்டுக் கழகம் வருடா வருடம் நடைமுறைப்படுத்திவரும் பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் இம்முறை இ.டிராஜினி, திருவேரகன் ஆகிய இரு மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களும், கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண அரசகரும மொழிகள் உதவிப் பணிப்பாளர் க.கோபிநாத், தாழங்குடா ஸ்ரீ விநாயகர் மகா வித்தியாலய அதிபர் சா.மதிசுதன் அவர்களும், கிராம அமைப்புக்களின் அங்கத்தவர்கள், விளையாட்டு வீரர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.











































No comments: