இச் சந்திப்பில் தாதியர் பாடசாலையில் நிலவுகின்ற குறைபாடுகளை கேட்டறிந்து அதற்கான தீர்வினை பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலமாக தொடர்புகொண்டு உரிய நடவடிக்கையினை துரிதமாக செய்து தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டதற்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு தாதியர் பாடசாலையில் சிரேஷ்ட தாதிய போதனாசிரியர்கள் தற்போது நான்கு பேர்கள் மாத்திரம் பணியாற்றி வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்ய வெளிமாவட்டத்தில் இருக்கின்ற உத்தியோகத்தர்களை தற்காலிகமாக நியமிக்கும்படி தாதியர் கல்லுரியின் அதிபர் A.M.T.B.அதிகாரி விடுத்த வேண்டுகோளை அமைச்சின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்த கருணா அம்மான் அதனை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இலங்கையிலுள்ள தாதிய பாடசாலைகளில் விடுதி முகாமைத்துவ மேற்பார்வைக்கான டிப்ளோமா கற்கைநெறியினை ஆரம்பிப்பதற்கான அடிப்படை வசதிகள் அற்ற நிலை பௌதீகவளங்களின் பற்றாக்குறை தொடர்பாக அமைச்சருடன் உரையாடி தீர்வு எட்டப்படவுள்ளதாக கருணா அம்மான் இதன்போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் பொது ஜக்கிய தாதியர் சங்கத்தின் கிழக்கு மாகாண தலைவர் நா.சசிகரன், தாதிய கல்லுரி அதிபர் A.M.T.B.அதிகாரி, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டத்திலிருந்து விடுதி முகாமைத்துவ மேற்பார்வைக்கான டிப்ளோமா கற்கைநெறிக்கு தெரிவான தாதிய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.




No comments: