மட்டக்களப்பு, அமிர்தகழி ஶ்ரீ சித்திவினாயகர் மகா வித்தியாலயத்தில் மாணவர்களுக்கான மூன்று நாள் வதிவிட தலைமைத்துவப் பயிற்சி முகாம் இன்று வௌ்ளிக்கிழமை (21) காலை ஆரம்பமானது.
அமிர்தகழி ஶ்ரீ சித்திவினாயகர் மகா வித்தியாலய அதிபர் மற்றும் உளவள ஆசிரியர் குழாம் ஒழுங்கமைப்பில், பாடசாலை முகாமைத்துவக் குழுவுடன் பாடசாலை மாணவர் வழிகாட்டல் குழுவும் இணைந்து நடாத்திய இப் பயிற்சி முகாமில் சிரேஷ்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பாடசாலை அதிபர் சர்வானந்தம் ரவிதேவன் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனை கல்வித் திணைக்கள அதிகாரிகள் வளவாளர்களாக கலந்துகொண்டனர்.
இன்று ஆரம்பமான இந்த தலைமைத்துவ பயிற்சி முகாமில் தலைமைத்துவம், ஒழுக்க விழுமியங்கள், தொடர்பாடல் உள்ளிட்ட பல விடயங்கள்பற்றி மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இன்று ஆரம்பமான இந்த வதிவிட பயிற்சி முகாம் எதிர்வரும் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: