
LEON
கிராமத்திற்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் தேசிய வேலைத்திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன .
இதன் கீழ் நாடளாவிய ரீதியில் ஒரு தேர்தல் தொகுதியில் ஒரு பிரதேச பிரிவில் முப்பது வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் வீடு அமைப்பதற்கு தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் , மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து இந்த வீடமைப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன .
இதற்கும் அமைய மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் தொகுதிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதி வீட்டுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மட்டக்களப்பு புதூர் கிராம சேவை பிரிவில் நடைபெற்றது
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட பணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .வியாழேந்திரன் , மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .கலாமதி பத்மராசா ,, பிரதேச செயலாளர் .வி .வாசுதேவன் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன் மற்றும் அரச அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.












No comments: