News Just In

2/01/2020 08:40:00 PM

மட்டக்களப்பில் பட்டதாரிகள் விபரம் பதியப்படுதல்-மறுக்கும் பிரதேச செயலாளர்!


LEON
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட பட்டதாரிகளின் சுயவிபர கோவையினை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலக அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய மாவட்ட பட்டதாரிகளின் சுயவிபர பதிவினை பெற்றுக்கொள்ளும் வகையில் சுயவிபர கோவையினை பதிவு செய்யும் நடவடிக்கையினை ( 01.02 ) இரண்டு நாட்கள் மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக பட்டதாரிகளின் சங்கத்தலைவர் அணிதன் தெரிவித்தார்

குறித்த பதிவு நடவடிக்கை தொடர்பாக மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவனிடம் கேட்டபோது .இது தொடர்பாக எதுவித தகவல்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் இவ்வாறான பதிவு நடவடிக்கை தொடர்பாக அறிவுறுத்தல்களை எவருக்கும் தான் வழங்க வில்லை என தெரிவித்தார்.









No comments: