News Just In

2/16/2020 09:15:00 PM

நிதி மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்கள் ஊடாக பல நிதி மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்க தலைவர் ராஜீவ் யாசிரு குருவிடேஜ் பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இணையத்தளத்தினை அடிப்படையாக கொண்ட வர்த்தக செயற்பாடுகள் எனும் போர்வையில் இத்தகைய மோசடிக்காரர்கள் ஒரு சேவையை வழங்குவதற்கு முன்னர் தமது வங்கிக் கணக்கில் பணம் வைப்பிலிடுமாறு நிதி மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது எனது தெரிவித்த இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவர்

பொது மக்கள் இவ்வாறான இணையத்தள நிதி மோசடிகளினால் ஏமாந்து விடக்கூடாதென வலியுறுத்தியுள்ளார்.

No comments: