அரசாங்கத்தின் உர மானிய கொள்கை திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆண்டின் சிறுபோக பயிர்ச் செய்கையின்போது பயன்படுத்தவிருக்கும் மானிய உதவியிலான உர விநியோக இலக்கினை பரிசீலிக்கும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் தேசிய உரச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (12)நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேசிய உரச் செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்டஉதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜீன், கமநல சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் கே. ஜகனாத், விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்புபணிப்பாளர் வை.பி.இக்பால்,
மட்டக்களப்பு விவசாய விரிவாக்கல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.பேரின்பராஜா, விவசாய காப்புறுதி சேவையின் பணிப்பாளர் கே. பாஸ்கரன் உட்பட அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் கமநலஅமைப்பின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இந்த ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இவ் வருட சிறுபோகத்தில் பெரும் நீர்ப் பாசனத்தின் கீழ் நெற்செய்கை பண்ணப்படவுள்ள 25 ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தெட்டு ஹெக்டெயரிலும், சிறிய நீர்ப்பாசத்தின் கீழ் எட்டாயிரத்து முந்நூற்று எண்பத்து நான்கு ஹெக்டெயரிலும் செய்கை பண்ணப்படவுள்ள நெற் செய்கைக்கு தேசிய உரச் செயலகத்தினூடாக உர மானியத்தை கோருவதென தீர்மானிக்கப்பட்டது.
இது தவிர உப உணவுப் பயிர்களான மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், கௌப்பி, பயறு வகைகளை எதிரகாலத்தில் செய்கை பண்ணுவது எனவும், அதற்கான மானிய உரத்தை தேசிய உரச் செயலகத்தில் பெற்றுக் கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மானிய உர வினியோகத்தை மேலும் இலகு படுத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கைகள் பற்றியும் ஏனைய விவசாயிகளின் தேவைகள் பற்றியும் ஆராயப்பட்டது.
வழமைபோல ஏனைய மாவட்டங்களுக்கு முன்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் விதைப்புமேற் கொள்ளப்படுவதனால் மானிய உரத்தை முன்கூட்டியே உரிய காலத்தினுள் விவசாயிகளுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடுகளை செய்வதாகவும் இதனடிப்படையில் தேவையான இலக்கினைக் கொண்ட மானிய உர உத்தேசஅறிக்கையை விரைவாக தேசிய உரச் செயலகத்திற்கு சமர்ப்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2/12/2020 06:10:00 PM
Home
/
உள்ளூர்
/
மட்டக்களப்பு
/
மாவட்ட செயலகம்
/
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மானிய உர விநியோகம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மானிய உர விநியோகம் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)



No comments: