லண்டனை சேர்ந்த 53 வயதான டக்மார் டர்னர் என்ற இசைக் கலைஞருக்கு மூளையில் வலது முன்பகுதியிலிருந்து ஒரு கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது.
இந்த சிகிச்சை மிகவும் சிரமமான நடைமுறை என்பதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி குறித்த வயலின் இசைக் கலைஞர் அறுவைச் சிகிச்சையின்போது இசைக்கும் திறமையானது பாதிப்புறாமல் இருப்பதற்காகவும், மருத்துவர்கள் மூளையின் சரியான பகுதியினை இலகுவாக அடையாளம் காணவும் வயலினை வாசித்தார். அறுவை சிகிச்சை முடிந்த மூன்று நாட்களுக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
(Video Credit-euronews)
இதுகுறித்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் அஸ்கான் கூறும் போது, ‘ஒவ்வொரு ஆண்டும் 400-க்கும் மேற்பட்ட கட்டி அகற்றும் அறுவை சிகிச்சைகளை செய்கிறோம். ஆனால் நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சை நடக்கும் போது இசைக்கருவி வாசிப்பது இதுவே முதல்முறை’ என்றார்.இதுதொடர்பாக டர்னர் கூறுகையில், ‘இசைப்பதற்கான திறனை இழந்து விடுவேன் என நினைத்தேன். ஆனால் மருத்துவர்கள் முறையாக திட்டமிட்டு கட்டிகளை அகற்றியுள்ளனர். அவர்களுக்கு நன்றி. நான் மிக விரைவில் இசைக்குழுவுடன் திரும்பி வருவேன்’ என தெரிவித்துள்ளார்.
No comments: