மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலும் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில் இன்று சனிக்கிழமை (22) காலை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மிக அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது.
இலங்கையின் 5வது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் பேன்றவற்றினால் நடாத்தப்படும் நிலையில் மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இப் பிரதேச செயலாளர் பிரிவில் 1217 வேட்பாளர்கள் பதிவு சய்யப்பட்டுள்ளனர் என மண்முனை வடக்கு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் ஆர். பிரவீன் தெரிவித்தார்.
இன்று காலை ஆரம்பமான வாக்களிக்கும் நிகழ்வில் பிரதேசத்தின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இளைஞர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகை தந்துருந்தனர்.
No comments: