(எஸ்.சதீஸ்)
இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நடைபெற்றுவரும் நிலையில் இன்று காலை மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தில் பொலிஸாரின் பாதுகாப்புடன் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றது.
இலங்கையின் 5வது இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் பேன்றவற்றினால் நடாத்தப்படும் நிலையில் மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து இரண்டு வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
இப் பிரதேச செயலாளர் பிரிவில் 855 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2/22/2020 11:50:00 AM
Home
/
உள்ளூர்
/
தேர்தல்
/
பிரதேச செயலகம்
/
மட்டக்களப்பு
/
வவுணதீவு
/
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு!
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: