News Just In

2/25/2020 03:00:00 PM

மாணவர்கள் நால்வர் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததன் எதிரொலி! கல்விச் சுற்றுலா செல்வது தொடர்பில் புதிய சட்டமூலம்!!

கோமரங்கடவல-மதவாச்சி குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் நால்வர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கல்விச் சுற்றுலாவிற்கு பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்வது தொடர்பான புதிய சட்டங்கள் அடங்கிய சுற்றுநிரூபத்தை அதிகாரிகளுக்கு அனுப்ப கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்விச் சுற்றுலாவிற்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் பயணத்தூரம் தொடர்பில் கவனம் செலுத்தும் புதிய சட்டங்களை உள்ளடக்கவும், சுற்றுலா செல்ல தீர்மானிகும் பகுதிகள், பயணத்தூரம், தங்குமிடங்கள் அடங்கிய அறிக்கையை பெற்றுக்கொள்ள கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான சுற்றுநிரூபத்தை மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

No comments: