திரப்பனை - நாச்சாதுவ பகுதியில் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் வன பாதுகாப்பு ஊழியர்களாலேயே நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குள்ளாகிய அதிகாரிகள் இருவர் அநுராதபுரம் தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சட்ட விரோதமாக திரப்பனை - நாச்சாதுவ பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள மரங்களை வெட்டப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து வன பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
வன பாதுகாப்பு திணைக்களத்தினர் சந்தேக நபரிடமிருந்து உழவு இயந்திரமொன்றயும் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது, திடீரென அங்கு வந்த குழுவினர் வன பாதுகாப்பு அதிகாரிகளின் மேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து தாக்குதலை மேற்கொண்ட குழுவினரும் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரும் உழவு இயந்திரத்துடன் தப்பி சென்றுள்ளனர்.
சந்தேக நபர்கள் பொலிஸாரால் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன் அவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: