-நூருல் ஹுதா உமர்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் பாராளுமன்ற தேர்தல் இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பித்து சுமூகமாக நடைபெற்று வருகிறது.
20 உறுப்பினர்களை அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்ய அம்பாறை மாவட்ட சகல பிரதேச செயலகத்திலும் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தமாக நாடு தழுவி யதாக 354 உறுப்பினர்களை தெரிவு செய்ய இடம்பெற்றுவரும் இத்தேர்தல் கணனிமயப்படுத்தப்பட்டு தேர்தல் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.
சாய்ந்தமருது, காரைதீவு, கல்முனை பிரதேச செயலக வாக்கு சாவடிகளில் வேட்பாளர்களும், வாக்காளர்களும் உற்சாகமாக வாக்களித்து வருவதுடன் இலங்கை பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
No comments: