பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அண்மையில் (16.02.2020) காணாமல் போயிருந்த கடவத்தை பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றிய 37 வயதான இரு பிள்ளைகளின் தந்தையான வீரகெட்டிய பகுதியைச் சேர்ந்த ஜயந்த ராஜபக்ஷ எனும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து 100 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் 72 மணி நேரம் மேற்கொண்ட தேடுதலில் குளியாபிட்டிய - பன்னை, யக்வில காட்டுப் பகுதியின் வேரஹெர- புளுகஹவத்த பகுதியில் வைத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளின் சடலம் மீட்கப்பட்டது.
சடலத்தின் அடையாளங்களை வைத்து, குறித்த சடலம் காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிள் ஜயந்த ராஜபக்ஷவினுடையது என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இந்த கடத்தல் மற்றும் கொலையின் பிரதான சந்தேக நபர்களில் ஒருவரான களனிய, கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் இணைந்து கைதுசெய்துள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிளின் உயிரிழப்பு தொடர்பில் பிரதான சந்தேக நபர்களுள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அதனுடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.
2/22/2020 08:48:00 AM
Home
/
உயிரிழப்பு
/
உள்ளூர்
/
கைது
/
பொலிஸ்
/
பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை! பிரதான சந்தேக நபரொருவரும் கைது!!
பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை! பிரதான சந்தேக நபரொருவரும் கைது!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: