News Just In

2/22/2020 08:15:00 AM

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டி இறுதிநாள் நிகழ்வுகள்

-நூருல் ஹுதா உமர்-
கல்முனை கல்வி வலய கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரியின் 2020 ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதிநாள் நிகழ்வுகள்
 நேற்று (21) பிற்பகல் வெகுவிமர்சையாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ.ஜாபிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலையின் வேண்ட் இசைக் குழுவினரின் இசையோடு அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு தேசிய கீதம், பாடசாலைக்கீதம் என்பன இசைக்கப்பட்டு நிகழ்வானது வைபக ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வியமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் எம்.டி.எ. நிஸாம் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மாநகர சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், அரச காரியால பிரதானிகள், கல்வி உயர் அதிகாரிகள், ஏனைய பாடசாலை அதிபர்கள், உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நடைபெற்று முடிந்த 2020 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் அரபா இல்லம் (நீலம்) 303 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தினையும், சபா இல்லம் (பச்சை) 278 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தினையும், மர்வா இல்லம் (சிவப்பு) 231 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தினையும் ஹிரா இல்லம் 182 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.

No comments: