-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-வருடந்தோறும் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டு வரும் பிரதேச கலாசார விழா வியாழக்கிழமை 20.02.2020 மாலை ஏறாவூர் அறபா வித்தியாலய ஆராதனை மண்டபத்தில் பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார பேரவையின் தலைவருமான எஸ்.எம். அல் அமீன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கலைஞர்களைக் கௌரவித்தார்.
இந்நிகழ்வில் கோலாட்டம், தகரா இசை, பல்குரல் இசை, பக்கீர்பைத், கிராமிய பாடல்கள், நடனம் நாடகம் உள்ளிட்ட கலாசார நிகழ்வுகளும் வாழ்நாள் சாதனையாளர் விருது, பரிசளிப்பு போன்ற இன்னும் பல நிகழ்வுகள் இடம்பெற்றன.
நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த, ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் உட்பட இன்னும் பல அதிதிகளும் கலைஞர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
2/21/2020 07:20:00 AM
மட்டக்களப்பு ஏறாவூரில் இடம்பெற்ற பிரதேச கலாசார விழா
Subscribe to:
Post Comments (Atom)
No comments: