அகில இலங்கை சுழியோடிகள் சங்க உறுப்பினர்களுக்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூல அமைச்சர் டக்ளஸ் தேவானத்தாவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
நேற்று (2020.02.06) அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போது சுழியோடிகள் தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதனால் தமது தொழிலை முன்னெடுத்துச் செல்வதில் அதிக சாவல்களை எதிர்கொள்வதாகவும் அமைச்சரிடம் எடுத்துரைத்தனர்.
சுமார் 200க்கு மேற்பட்ட சுழியோடிகள் கலந்துகொண்ட இச்சந்திப்பில் கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் காரணமாக தமது தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் அவ் வர்த்தமானி அறிவித்தலில்; காணப்படும் சில விடையங்களை அகற்றுவதற்கு நடடிவக்கையெடுக்குமாறும் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
சுழியோடிகளின் பிரச்சினைகளை செவிமடுத்த அமைச்சர் சுழியோடிகள் நாட்டிற்கு மிகவும் இன்றியமையாதவர்கள் எனவும் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதாகவும் உறுதியளித்தார்.
2/07/2020 12:26:00 PM
சுழியோடிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு-அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாக்குறுதி
Subscribe to:
Post Comments (Atom)

No comments: