News Just In

2/20/2020 09:30:00 AM

சாய்ந்தமருதில் வீதி ஓரங்களில் விருந்து சமைத்து தனியான நகரசபைக்கான வெற்றிக் கொண்டாட்டம்!!

மாளிகைக்காடு நிருபர் - நூறுல் ஹுதா உமர்

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை, வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் முகமாக கடந்த திங்கட்கிழமை மாலை ஆரம்பித்த வெற்றிகொண்டாட்டம் இன்னும் ஓயாமல் சாய்ந்தமருது பிரதேசம் எங்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

சாய்ந்தமருது பிரதேசவாசிகளுடன், சாய்ந்தமருதை பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தக சங்கமும் இணைந்து வீதிகளின் ஓரங்களில் அடுப்பு மூட்டி விருந்து சமைத்து

பொதுமக்களுக்கு பகிர்ந்தளித்தும் வீதிகளில் செல்லும் பயணிகளுக்கு இனிப்பு, பால்சோறு என்பன வழங்கியும் தொடர்ந்தும் மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர். இந்நிகழ்வில் சாய்ந்தமருதை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த பெருமளவிலான பொதுமக்களும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்கின்றனர்.

No comments: