"என்னை எப்படியாவது இங்க இருந்து சீக்கிரம் கூட்டிட்டு போயிடுங்க எனக்கு சாதாரண காய்ச்சல்தான்" என இந்தியாவினை சேர்ந்த மணப்பெண் ஒருவர் கண்ணீருடன் சீனாவில் இருந்து வீடியோ வெளியிட்டுள்ளது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஈர்னபாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி, இவருக்கு அண்மையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. சித்தூர் மாவட்டம் ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் பணி நிமித்தம் சீனாவில் உள்ள வுஹானுக்கு கிளம்பி சென்றார்.
இவர் சீனா சென்ற சில நாட்களில் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹான் மாகாணம் முழுவதும் தீவிரமாக பரவியது. இதனைத் தொடர்ந்து வைரஸ் பாதிக்காமல் இருக்க, இந்திய அரசு அங்கிருந்த இந்தியர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுத்தது.
இதையடுத்து, ஜோதி உட்பட பல இந்தியரையும் மீட்க விமானம் தயாராக இருந்தது. ஜோதியும் அந்த விமானத்தில் வர தயாரானார். விமானம் புறப்பட முன்பு அவரை பரிசோதித்தபோது, அவருக்கு காய்ச்சல் இருந்தததனால் ஜோதியை சீன அரசு இந்தியா அனுப்ப மறுத்துவிட்டது.
கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதியில் சிக்கியுள்ள தங்கள் மகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருக்கும் பெற்றோர், மத்திய மாநில அரசுகள் தங்கள் மகளை மீட்டு இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)



No comments: