News Just In

2/04/2020 08:00:00 PM

அரசாங்கம் தேசிய கீதத்தை தமிழில் பாடுவதனை நிராகரித்து பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தியுள்ளது-மனோ கணேசன்

சுதந்திர நிகழ்வில் அரசாங்கம், தமிழில் தேசிய கீதத்தை, சர்வதேச, உள்ளூர் சமூகங்களுக்கு எதிரில், நிராகரித்து, பிரிவினைவாதத்தை நியாயப்படுத்தி, தேசபக்தர்களை ஏமாற்றியுள்ளது. ஒரு இலங்கையனாக வெட்கமும், கவலையும் அடைகிறேன் என

முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் கூறியுள்ளார்.

குறித்த செய்தி தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர் இந்த அரசாங்கம் தமிழீழ கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளது என்பதை தவிர வேறெதுவும் சொல்ல விரும்பவில்லை எனவும்

கடந்த ஆட்சியில் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் ஆரம்பிக்கபட்ட தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை பாடும் வழமை, இவ்வருட சுதந்திர தின நிகழ்வில் அது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

இவ் வருட சுதந்திர தின நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் இடம்பெறாது என்ற செய்தி தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கவனத்துக்கு பலமுறை கொண்டு வந்தேன் “இந்த கடைசி தருணத்திலாவது, நல்ல முடிவை எடுங்கள் என நேற்றும் கேட்டிருந்தேன்” என மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: