News Just In

2/04/2020 07:30:00 PM

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 72ஆவது சுதந்திர தின நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
நாம் பிளவுபட்டு நிற்பதால் சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகளுக்குப் பின்னும் இன்னமும் அபிவிருத்தி அடையாமல் இருக்கின்றோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.

ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இலங்கையின் 72வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் நிகழ்வு ஏறாவூர் வாவிக்கரை அஹமட் பரீட் மைதானத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அலிஸாஹிர் மௌலானா, நாம் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டும். ஏனென்றால் அபிவிருத்தி அடைவதற்குத் தேவையான அத்தனை வளங்களும் நமது நாட்டில் இருக்கின்றன.

அந்தப் பெருமையை அடைந்து கொள்ளாது நமது துரதிருஷ்டமே. அனைவர் மத்தியிலும் நாம் இலங்கையர் என்ற தேசிய வாதத்தை உருவாக்கவில்லை. அதனால்தான் இத்தனை பின்னடைவு.

இந்தியப் பரந்த உபகண்டத்திலே பல மதங்கள், பல மொழிகள் உள்ள அந்த நாட்டில் நாம் இந்தியர் என்று அரசியலமைப்பை உருவாக்கினார்கள்,

அதேபோல நமது நாட்டிலும் நாம் இலங்கையர் அற்புதமான கொள்கையை நடைமுறைப்படுத் கூடிய நாட்டின் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் இந்த நாட்டுக்குத் தேவை.

அதன் மூலமாகவே நாட்டுக்கு ஆளுமையும், அபிவிருத்தியும் ஏற்படும். நாம் அடைந்த சுதந்திரம் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமாயின் இந்த அம்சங்கள் நாட்டுத் தலைவர்கிளிடமும் அரசியல் தலைவர்களிடமும் இருக்க வேண்டும் ' என்றார்.

No comments: